திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

உடுமலையில் நூல் வெளியீட்டு விழா

DIN | Published: 12th September 2018 01:27 AM

"சாதனைப் பெண் பாரதி' எனும் நூல் வெளியீட்டு விழா உடுமலையில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது.
உடுமலை, வஉசி வீதியில் உள்ள ராமய்யர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் கே.பழனியப்பன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஓய்வுபெற்ற கோட்டப் பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். 
இதைத் தொடர்ந்து, "சாதனைப் பெண் பாரதி' எனும் நூலை துரை அங்குசாமி வெளியிட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சுபாஷ் சந்திரபோசு பெற்றுக் கொண்டார்.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றோர் வாழ்த்துரை வழங்கினர்.  நூல் ஆசிரியர் கே.நடராசு ஏற்புரையாற்றினார்.

More from the section

மொண்டிபாளையம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்
சிவன்மலை முருகன் கோயிலில் இன்று தைப்பூசத் தேரோட்டம்
சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சூதாடிய 47 பேர் கைது: ரூ.1.75 லட்சம் பறிமுதல்

கடும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்வு