சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா

DIN | Published: 12th September 2018 01:30 AM

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியருக்குப் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
வெள்ளக்கோவில், கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ந.மகேஸ்வரி தலைமை வகித்தார். பள்ளியின் முன்னாள் மாணவியும், வெள்ளக்கோவிலைச் சேர்ந்தவரும், தற்போது திருப்பூர் அனுப்பர்பாளையம் கவிதா லட்சுமி நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வரும் மு.கற்பகம் (48) நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். 
 இவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில் நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துகுமார், நகர் மன்ற முன்னாள் தலைவர் வி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்புரையாற்றினர். 
வெள்ளக்கோவில் ஒன்றியப் பள்ளிக் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி.சண்முகராஜ், கிழக்குப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் ஏ.மகாதேவன், வட்டாரத்தைச் சேர்ந்த பிற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வ.பாபு, செ.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாராட்டிப் பேசினர்.  விழாவுக்கான ஏற்பாடுகளை கிழக்குப் பள்ளித் தலைமை ஆசிரியை செ.வசந்தா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


 

More from the section

இயற்கை எரிவாயு நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள்:
முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

வெள்ளக்கோவில்: 10 கிலோ  பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
பின்னலாடை நிறுவனத்தில் ரூ.4 லட்சம் மோசடி: மேலாளர் கைது
கிணற்றில் இறந்த மீன்களை எடுக்க முயன்ற விவசாயி சிக்கித் தவிப்பு


குன்னத்தூரில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: மனைவி சாவு