வியாழக்கிழமை 17 ஜனவரி 2019

நீரில் மூழ்கடித்து குழந்தை கொலை: தாய் கைது

DIN | Published: 12th September 2018 01:26 AM

திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் இரண்டரை வயது குழந்தையை டிரம் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த தாயை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி நாகராஜ். இவரது மனைவி தமிழ் இசக்கி. இவர்களது இரண்டரை வயது மகள் சுகன்யாஸ்ரீ. இந்நிலையில், வீட்டில் பிளாஸ்டிக் டிரம்மில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் மூழ்கிய நி குழந்தை சுகன்யாஸ்ரீ திங்கள்கிழமை உயிரிழந்தது. 
இதுகுறித்து, மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தாயே குழந்தையைக் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
நாகராஜ், தமிழ் இசக்கி  தம்பதிக்கு இடையே கடந்த சில நாள்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல திங்கள்கிழமையும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து நாகராஜ் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார். 
கணவர் மீது ஆத்திரமடைந்த தமிழ் இசக்கி, குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். 
அப்போது நாகராஜ் வந்துவிட்டதால் மயக்கமடைந்ததுபோல தமிழ் இசக்கி நடித்தது தெரியவந்தது. இதையடுத்து, மங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தமிழ் இசக்கியை கைது செய்தனர்.
 

More from the section

சிவன்மலையில் வீரகாளியம்மன் தேர் திருவீதி உலா
ஐயப்ப சுவாமி கோயிலில் அஷ்டாபிஷேகம்


சட்ட விரோதமாக மது விற்பனை: 23 பேர் கைது

திருப்பூரில் இரு சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
பள்ளிகளில் பொங்கல் விழா