சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

அரூரில்  33 மி.மீ மழை

DIN | Published: 11th September 2018 09:26 AM

அரூரில் திங்கள்கிழமை  அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது. இதேபோல்,  பாப்பிரெட்டிப்பட்டியில் 2.40 மில்லி மீட்டர் மழை  பதிவாகியுள்ளது.
அரூர், எச்.ஈச்சம்பாடி,  கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதே சமயம் தீர்த்தமலை, சித்தேரி, கீரைப்பட்டி உள்ளிட்ட பகுதியில் லேசான அளவில்கூட மழை இல்லை. இதனால் அந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

More from the section

தொழிற்பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்
பிளாஸ்டிக் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கிணற்றில் விழுந்து பெண் சாவு


சுண்டாங்கிப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு