திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

நரிப்பள்ளியில் 7 பவுன் நகை திருட்டு

DIN | Published: 11th September 2018 09:27 AM

அரூரை அடுத்த நரிப்பள்ளியில் 7 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
அரூர் வட்டம், நரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி ராணி (55). இவர், அந்த ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து
வருகிறார். 
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு யாரும் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த சங்கிலிலி, மோதிரம் உள்ளிட்ட  7 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ராணி அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.

More from the section

சின்னாங்குப்பத்தில் மருத்துவ முகாம் தேவை
எஸ்.அம்மாபாளையம், கீழ்எண்ணடப்பட்டியில்  ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்
பாலக்கோடு சீரியம்பட்டியில் எருதாட்டம்
வி.சி.கட்சியினர் தெருமுனை பிரசாரம்
ஜனவரி 22 மின் தடை