20 ஜனவரி 2019

கால்பந்து, கேரம் போட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அரசுப் பள்ளி முதலிடம்

DIN | Published: 12th September 2018 07:56 AM

தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்கள் தருமபுரி மாவட்ட அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில், கால்பந்து மற்றும் கேரம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள், பயிற்சி அளித்த உடற் கல்வி இயக்குநர் மரிய சேவியர்,  உடற் கல்வி ஆசிரியர் ஜெகஜீவன்ராம் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் அஜீஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
 

More from the section

ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரியில் முப்பெரும் விழா
பெண் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வலியுறுத்தல்
ஆம்புலன்ஸ் ஓட்டுநரைதாக்கிய இளைஞர் கைது
ஜன.30 பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கசமூக நல்லிணக்க மேடை முடிவு
அரசியல் விளம்பர தட்டிகள் கிழிப்பு: போலீஸார் விசாரணை