திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

தருமபுரி நீதிமன்றத்தில் காலி நீதிபதி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN | Published: 12th September 2018 08:06 AM

தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் திங்கள்கிழமை தலைவர் டி.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது. செயலர் எஸ்.எழில்சுந்தரம் முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில்,  தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடத்தை நிரப்ப வேண்டும். புதிதாக செயல்பட உள்ள சார்பு நீதிமன்றம், மகளிர் விரைவு நீதிமன்றம், அஞ்சலகம்,  இந்தியன் வங்கிக் கிளை ஆகியவற்றை விரைந்து திறக்க வேண்டும். வளாகத்தில் கேண்டீன் அமைத்து, அதனை வழக்குரைஞர் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்ற ஊழியர்கள் மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையை அகலப்படுத்தி, சுற்றுச்சுவர் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

More from the section

சின்னாங்குப்பத்தில் மருத்துவ முகாம் தேவை
எஸ்.அம்மாபாளையம், கீழ்எண்ணடப்பட்டியில்  ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்
பாலக்கோடு சீரியம்பட்டியில் எருதாட்டம்
வி.சி.கட்சியினர் தெருமுனை பிரசாரம்
ஜனவரி 22 மின் தடை