சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

பெட்ரோல் விலை உயர்வுக்கு தேசிய லீக் கண்டனம்

DIN | Published: 12th September 2018 07:57 AM

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வுக்கு இந்திய தேசிய லீக் கண்டனம் தெரிவித்துள்ளது.
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்றும்,  அதேபோல, எவ்வித விசாரணையும் முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ஏ. சிக்கந்தர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.கே. கலாம் வரவேற்றார். பொருளாளர் எம். ஜலால் நன்றி கூறினார்.
 

More from the section

தொழிற்பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்
பிளாஸ்டிக் பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிப்பு
ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கிணற்றில் விழுந்து பெண் சாவு


சுண்டாங்கிப்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு