வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கலப்பம்பாடி மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா

DIN | Published: 19th September 2018 08:21 AM

பென்னாகரம் அருகே கலப்பம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உணவுத் திருவிழாவை பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.மாதேசன் தொடக்கி வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர்கள் சிவக்குமார், முருகன் மற்றும் ஆசிரியர்கள் சங்கர், நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில்,  பள்ளி மாணவ, மாணவியர் கம்பு, தினை,  வரகு உள்ளிட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருள்களை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், பாரம்பரிய உணவு முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினர். இதனை, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.

More from the section

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி


கடத்தூர் ஒன்றிய அலுவலகப் பணிகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும்: மக்கள் எதிர்பார்ப்பு

மொரப்பூர் பகுதியில் நீர்பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
தருமபுரி மக்களவைத் தொகுதி: மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
பாலக்கோட்டில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி