சனிக்கிழமை 23 மார்ச் 2019

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: பிப்.22-இல் நேர்காணல் தொடக்கம்

DIN | Published: 19th February 2019 09:20 AM

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் வருகிற பிப்.22-ஆம் தேதி தொடங்கி பிப்.28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இது குறித்து,   மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கால்நடைப் பராமரிப்புத் துறையில் தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு பிப்.22 முதல் 28-ஆம் தேதி வரை காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை தருமபுரி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் (ராஜாஜி நீச்சல் குளம் எதிரில்) நடைபெற உள்ளது.
இப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியாக அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், நேர்முக அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், அழைப்பாணைகளை பிப்.20 மற்றும் 21 ஆகிய நாள்களில் தருமபுரி மாவட்ட மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் (கால்நடை பெருமருத்துவமனை வளாகம்) விண்ணப்பித்ததற்கான ஆதாரங்களுடன் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றார்.

More from the section

தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்
திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் கொண்டுவரவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி
அமமுக வேட்பாளர்கள் சுயவிவரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி 


இடைத்தேர்தல்: பாப்பிரெட்டிப்பட்டியில் உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்