சனிக்கிழமை 23 மார்ச் 2019

தருமபுரியில் இன்று உணவு பாதுகாப்பு உரிம பதிவு முகாம்

DIN | Published: 19th February 2019 09:20 AM

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (பிப்.19) உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 
இது குறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதியில் உள்ள உணவுத் தொழில் செய்யும் உணவு வணிகர்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், தேநீர்க் கடைகள், சிறு பெட்டிக்கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு பெற்று வணிகம் செய்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும். இதுவரை உரிமம் பெறாத அல்லது புதுபிக்க வேண்டியவர்களுக்காக பிப்.19-ஆம் தேதி சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 4 மணி வரை தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகே நடைபெற உள்ளது. எனவே, வணிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

More from the section

தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்
திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் கொண்டுவரவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி
அமமுக வேட்பாளர்கள் சுயவிவரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி 


இடைத்தேர்தல்: பாப்பிரெட்டிப்பட்டியில் உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்