சனிக்கிழமை 23 மார்ச் 2019

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

DIN | Published: 19th February 2019 09:19 AM

அரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அரூர் இந்தியன் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி மேலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம், வர்ணதீர்த்தம், பேருந்து நிலையம், கடைவீதி வழியாகச் சென்றது. இதில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இதில் பள்ளி முதல்வர் நிர்மலா ஸ்ரீ, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

More from the section

தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்
திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் கொண்டுவரவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி
அமமுக வேட்பாளர்கள் சுயவிவரம்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி 


இடைத்தேர்தல்: பாப்பிரெட்டிப்பட்டியில் உழைப்பாளி மக்கள் கட்சி வேட்பு மனு தாக்கல்