திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஜெருசலம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

DIN | Published: 22nd February 2019 09:45 AM

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் பயணம் மேற்கொள்ள அரசு வழங்கும் நிதியுதவியை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இத்திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை, அனைத்து இணைப்புகளுடன், அஞ்சல் உறையில் "ஜெருசலம் புனிதப் பயணத்துக்கான விண்ணப்பம்' என குறிப்பிட்டு மேலாண் இயக்குநர், தமிழக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கல்ச மஹால் பாரம்பரியக் கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை-5  என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றார்.    
 

More from the section

தருமபுரி உழவர் சந்தையில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு
ஊத்தங்கரை அருகே ஊர்த் திருவிழாவில் மோதல்: ஒருவர் பலி: 3 பேர் கைது
வனப்பகுதியில் மான் வேட்டையாடிய 3 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்
அரசுப் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை
கம்பைநல்லூர்சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்