செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

எஸ்.அம்மாபாளையம், கீழ்எண்ணடப்பட்டியில்  ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்

DIN | Published: 21st January 2019 07:22 AM

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே எஸ்.அம்மாபாளையம் மற்றும் புலிகரை அடுத்துள்ள கீழ்எண்டப்பட்டியில் வருகிற ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எஸ்.அம்மாபாளையம் கிராமத்தில் வருகிற ஜன.29 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதேபோல பாலக்கோடு வட்டம், புலிகரை அடுத்துள்ள கீழ்எண்டப்பட்டி கிராமத்தில் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. 
இந்த முகாம்களில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கின்றனர். எனவே, எஸ்.அம்மாபாளையம் மற்றும் கீழ்எண்டப்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இந்த முகாமில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More from the section

விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்திய காட்டு யானைகள் !
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: பிப்.22-இல் நேர்காணல் தொடக்கம்
தருமபுரியில் இன்று உணவு பாதுகாப்பு உரிம பதிவு முகாம்


துப்பாக்கியால் சுட்ட கொள்ளையர்களை பிடித்த காவலர்களுக்கு ஐ.ஜி பாராட்டு

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்