சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

சின்னாங்குப்பத்தில் மருத்துவ முகாம் தேவை

DIN | Published: 21st January 2019 07:22 AM

அரூரை அடுத்த சின்னாங்குப்பத்தில் அடுத்தடுத்து பலருக்கு காய்ச்சல் தொற்று உள்ளதால், அக் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னாங்குப்பம் கிராமத்தில் 300-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக பலர் தொடர் காய்ச்சல் மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வீடுகளிலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மேலும், அக் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் சரிவர மேற்கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, சின்னாங்குப்பத்தில் மருத்துவ முகாம் நடத்தி பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்க வேண்டும் என அக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from the section

நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  
காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு
தீர்த்தமலையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
சென்றாயம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு
"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'