சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பாலக்கோடு சீரியம்பட்டியில் எருதாட்டம்

DIN | Published: 21st January 2019 07:22 AM

பாலக்கோடு சீரியம்பட்டியில் பொங்கலையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற எருதாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காளைகள்
பங்கேற்றன.
சீரியம்பட்டி,கோட்டூர்,பெல்ரம்பட்டி,பேவுஅள்ளி உள்பட 9-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் காளைகளை அலங்காரம் செய்து வாடிவாசல் வழியாக ஓடவிட்டனர். இந்த விழாவில்  200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 
பாலக்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். மாரண்டஅள்ளி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More from the section

நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  
காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு
தீர்த்தமலையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
சென்றாயம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு
"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'