சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

DIN | Published: 22nd January 2019 08:42 AM

தருமபுரி மாவட்டத்தில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
தருமபுரி நகர பா.ஜ.க. சார்பில் நகரத் தலைவர் கே.சரவணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:  தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தருமபுரி நேதாஜி புறவழிச்சாலையில் பிடமனேரி பிரிவு சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். தருமபுரி நான்கு முனைச் சாலைப் பகுதியில் திரையரங்கம் அருகில் உள்ள மதுக்கடை மற்றும் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள மதுக்கடை ஆகிய இரண்டு மதுக்கடைகளால், மாணவ, மாணவியர், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இவ்விரு மதுக்கடைகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளனர்.

More from the section

நிறுத்திவைப்பை அறியாமல் நேர்காணலுக்கு வந்த விண்ணப்பதாரர்கள்  
காணொலி மூலம் விளையாட்டு விடுதி, பள்ளிக் கட்டடம் திறப்பு
தீர்த்தமலையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்
சென்றாயம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு
"காங்கிரஸ் ஆட்சிக்கால நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்'