வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு  7 ஆயிரம் கனஅடியாகக் குறைவு

DIN | Published: 12th September 2018 08:10 AM

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. 
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை  மாலை 5மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்த நீர்வரத்து ,செவ்வாய்கிழமை காலை 9 மணி நிலவரப்படி  நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.  மேலும்,  ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு  62-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

More from the section

பென்னாகரம் அருகே சீராக குடிநீர் வழங்கக் கோரி மறியல்


தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே வேடப்பட்டியில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் கோரிக்கை

வீடு தீப்பிடித்ததில் பொருள்கள் சாம்பல்
உழவர் சந்தை அருகே 2 மாத குழந்தை மீட்பு


ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா