திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

ஒசூரில் 60 பேருக்கு ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பரிசல்கள்: அமைச்சர் வழங்கினார்

DIN | Published: 12th September 2018 08:09 AM

ஒசூரில் 12 மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழையிலான பரிசல்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மீன்வளத்துறை உதவி இயக்குநர் தில்லைராஜன் வரவேற்றார்.
இதில் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி  பேசியது:
2017- 2018 -ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 60 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.7.50 லட்சம்  மதிப்பில் பரிசல்கள் வழங்க ஆணையிடப்பட்டது.
ஒசூர் மீனவர் கூட்டுறவு சங்கம், கிருஷ்ணகிரி மீனவர் கூட்டுறவு சங்கம், தேன்கனிக்கோட்டை மீனவர் கூட்டுறவு சங்கம், தளி மீனவர் கூட்டுறவு சங்கம், சூடாபுரம் மீனவர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர்,  ஒசூர் வட்டாட்சியர் முத்துபாண்டி, மீன்வளத்துறை ஆய்வாளர் கதிர்வேல்,  ஒசூர் கூட்டுறவு மீனவர் சங்கத் தலைவர் ஐஸ்வர்யா, அதிமுக நகரச் செயலாளர் பால்நாராயணன், அதிமுக மாவட்ட பொருளாளர் கே.நாராயணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More from the section

காலி குடங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அஞ்செட்டி அருகேநீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலப்பு?
விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்தியச் சட்டத்தை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
தேவிரஅள்ளி பள்ளியில் கூடுதல் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் அவதி
நண்பரைக் கொலை செய்த வழக்கில் இளைஞர் கைது