24 பிப்ரவரி 2019

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு

DIN | Published: 12th September 2018 08:08 AM

ஒசூர் சூடவாடி தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் செ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ம. பவுன்துரை வரவேற்றார். 
மாவட்ட,  வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப்  பின்னர் மத்தூர்,  ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். மத்தூர் கல்வி மாவட்ட மாவட்டத் தலைவராக சா. ராஜேந்திரன், மாவட்டச் செயலராக செ. ராஜேந்திரன் மாவட்டப் பொருளாளராக த. செல்வம், மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக க. தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் இரா. சாந்தா, துணைச் செயலராக பா.ஜியாவுல்லா, தணிக்கைக் குழு நிர்வாகியாக சி. மாதையன் ஆகியோருக்கு மாநிலப் பொருளாளர் க. சந்திரசேகர்   பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினார்.தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத் தலைவர் தூ. மனுநீதி நன்றி கூறினார். 

More from the section

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத் தேர்தல்
காவேரிப்பட்டணம் அருகே பொது கிணற்றை மூட எதிர்ப்பு
ஊத்தங்கரையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம்
மு.க.ஸ்டாலின் இன்று ஒசூர் வருகை