வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

எச்.ஐ.வி. விழிப்புணர்வு மீம்ஸ் படைப்பாளிகளுக்கு ஆட்சியர் பாராட்டு

DIN | Published: 19th February 2019 09:18 AM

எச்.ஐ.வி. விழிப்புணர்வு குறித்து,  சிறந்த  மீம்ஸ் படைப்பாளிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பாராட்டி, சான்றிதழ்களை திங்கள்கிழமை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாநில அளவில் எச்.ஐ.வி. குறித்து,  மீம்ஸ் உருவாக்கும் போட்டி கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், மாநில அளவில் 1,165 பேர் பங்கேற்றனர்.
அதில், சிறந்த 100 மீம்ஸ் படைப்பாளிகளை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு இணைச் செயலாளர் ஸ்ரீ அசோக் சாக்சானா, ஸ்ரீ நரேஷ் கோயல் ஆகியோர் தேர்வு செய்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக  ஸ்ரீ தர், அந்தோணி, முருகன், அருள் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை, மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பாராட்டி  சான்றிதழ்கள், எச்ஐவி விழிப்புணர்வு வாசகம் பதிந்த போலோ ஆடைகளை வழங்கினார். அப்போது, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் உடனிருந்தார்.
 

More from the section

யானை தாக்கியதில் பெண் சாவு
ஒசூர் தொகுதியில் முதன்முறையாக திமுக-அதிமுக நேரடி போட்டி


திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு


கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பு மனு தாக்கல்


மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு