24 மார்ச் 2019

தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

DIN | Published: 19th February 2019 09:17 AM

தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொலைத் தொடர்புத் துறைக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும், 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன்,  ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்,  ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், செல்லிடப்பேசி கோபுரங்களை பராமரிப்புப் பணியில் தனியாரை பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் வருகிற பிப்.20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இப்போராட்டத்தில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 92 அதிகாரிகள், 246 ஊழியர்கள் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் பிஎஸ்என்எல் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன.

More from the section

போச்சம்பள்ளியில் முதல்வருக்கு வரவேற்பு
ஒசூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுமி, 2 சிறுவர்கள் சாவு
கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அ.செல்லகுமார் போட்டி
பாரத் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா