சனிக்கிழமை 23 மார்ச் 2019

பெண்ணுக்கு வரதட்சிணைக் கொடுமை: கணவர் உள்பட 4 பேர் மீது புகார்

DIN | Published: 19th February 2019 09:18 AM

ஒசூரில் இளம் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை அளித்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ஒசூர் வி.ஐ.பி. நகர் விவேக் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சாய் ரம்யா கட்டா (26). இவருக்கும், மாருதி நகர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் சௌத்ரி  (31) என்பவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் சாய் ரம்யா கட்டாவை அவரது கணவர் வீட்டினர் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் அட்கோ காவல் ஆய்வாளர் பெரியசாமி விசாரித்து கணவர் ராகேஷ் சௌத்ரி, அவரது குடும்பத்தினர் கிருஷ்ணராவ், கிரண்ராவ்,  ரக்ஷிதா சௌத்ரி ஆகிய 4  பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

More from the section

இடைத்தேர்தல்: ஒசூர் தொகுதியில் 2 சுயேச்சைகள் உள்பட 4 பேர் மனு தாக்கல்
ஊத்தங்கரை அருகே தீயில் கருகி தாய், ஒன்றரை வயது மகள் பலி
ஒசூர் மாநகராட்சியில் கோடைக்கு முன்பே தொடங்கியது குடிநீர் பிரச்னை
கிருஷ்ணகிரியில் பார்வையற்றோர் பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணர்வு
"தருமபுரி-ஒகேனக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்'