சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்

DIN | Published: 22nd February 2019 09:42 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலர் கே.அசோக்குமார் எம்.பி. கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா நாடுமுழுவதும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
இதையொட்டி, அதிமுக சார்பில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள அவரது சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், அதிமுகவின் கட்சிக் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டுகிறேன். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from the section

இடைத்தேர்தல்: ஒசூர் தொகுதியில் 2 சுயேச்சைகள் உள்பட 4 பேர் மனு தாக்கல்
ஊத்தங்கரை அருகே தீயில் கருகி தாய், ஒன்றரை வயது மகள் பலி
ஒசூர் மாநகராட்சியில் கோடைக்கு முன்பே தொடங்கியது குடிநீர் பிரச்னை
கிருஷ்ணகிரியில் பார்வையற்றோர் பிரெய்லி முறையில் வாக்களிக்க விழிப்புணர்வு
"தருமபுரி-ஒகேனக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும்'