சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

அரசு தொகுப்பு வீட்டில் செயல்படும் மதுக் கடையை அகற்றக் கோரிக்கை

DIN | Published: 22nd January 2019 08:48 AM

ஊத்தங்கரை அருகே காரப்பட்டி கிராமத்தில் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செயல்படும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அளித்த,  மனுவில் தெரிவித்துள்ளது:  மக்கள் அதிக நடமாட்டம் உள்ள காரப்பட்டி பெரியார் நகரில்  அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய நிலையில், மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 

More from the section

ஊத்தங்கரையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம்
மு.க.ஸ்டாலின் இன்று ஒசூர் வருகை


மத்தூர் அருகே கார் விற்பனையாளர் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது


கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு: 146 பேர் பங்கேற்பு