சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஆணவப் படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

DIN | Published: 22nd January 2019 08:50 AM

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நந்தீஷ் குடும்பத்திற்கு தி.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. 
ஒசூர் அருகே ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சூடகொண்டப்பள்ளி நந்தீஷ் குடும்பத்தினருக்கு தி.க. சார்பில் ரூ. 1லட்சம் நிதி உதவியை, ஒசூர் பாகலூர் அட்கோவில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியின்போது பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட தி.க. தலைவர் வனவேந்தன், மாவட்டச் செயலாளர் செல்வம், அமைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வணங்காமுடி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரியார் படிப்பகத்தில், தி.க.கொடியை அன்புராஜ் ஏற்றி வைத்தார்.

More from the section

ஊத்தங்கரையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம்
மு.க.ஸ்டாலின் இன்று ஒசூர் வருகை


மத்தூர் அருகே கார் விற்பனையாளர் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது


கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு: 146 பேர் பங்கேற்பு