வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்

DIN | Published: 22nd January 2019 08:49 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள், திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கும் நிகழ்வு, கிருஷ்ணகிரியை அடுத்த அண்ணாநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தலைமை வகித்தார். கே.அசோக்குமார் எம்.பி., மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார். 
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி, கல்வி அலுவலர்கள் கிருஷ்ணாதேஜஸ்,  சர்தார்,  கணேசன், ராஜேந்திரன், பள்ளிக் கல்வி ஆய்வாளர் ஜெயராமன், தலைமையாசிரியர் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74 அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு 1,620 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த கையெழுத்துத் திறன், பேச்சுத் திறன் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஜோடி சீருடைகள், காலணி, கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

More from the section

இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


எருது விடும் விழா: விலங்குகள் நல வாரிய ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் பிப். 28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்
"அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் ஓர் ஆண்டு சிறை'