சனிக்கிழமை 20 ஜூலை 2019

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது

DIN | Published: 01st July 2019 10:06 AM

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களான கர்நாடகம்,ஆந்திரம் மற்றும் கேரளத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது.

எண்ணெய் மசாஜ், பிராதன அருவி பகுதிகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் எளிதாக செல்ல முடிந்தது. அருவியில் குளித்து முடித்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். தொங்கும் பாலம், சிறுவர் பூங்கா,முதலைப்பண்ணை மற்றும் மீன் காட்சியகத்தில் வழக்கத்தைவிட  சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.சத்திரம், முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒகேனக்கல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 

More from the section

ஜூலை 20 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ஆட்சியர்
அரசு மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை புறக்கணிப்புப் போராட்டம்
தருமபுரி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு
சூசூவாடியில் 125 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கல்