திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

திருச்செங்கோடு அருகே தீ விபத்து

By  திருச்செங்கோடு,| DIN | Published: 11th September 2018 09:33 AM

திருச்செங்கோடு அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் இருசக்கர வாகனம், உடைமைகள் சேதமடைந்தன.
 சித்தளந்தூர் பனங்காடு பகுதியில் வசிப்பவர் செல்லம்மாள். இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இதில், வீட்டுக்குள் இருந்த இருசக்கர வாகனங்கள், வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் சாம்பலாகின. தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு எம்எல்ஏ பொன்.சரஸ்வதி நிகழ்விடம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினார். உடன் திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
 

More from the section


தேர்தல் கூட்டணி குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்

காவல்துறை மூலம் முன் நடத்தை சரிபார்ப்பு இணையதள சேவை: எஸ்.பி. தகவல்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க அழைப்பு
ஜனவரி 22 மின் தடை
பரமத்தி வேலூரில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கபாடி போட்டி