24 மார்ச் 2019

எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

DIN | Published: 24th February 2019 03:35 AM


பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா எஸ்.வாழவந்தி ஊராட்சி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
மோகனூர் ஒன்றியத்துக்குள்பட்ட எஸ்.வாழவந்தி ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் முதலாம் ஆண்டு விழா, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 62 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஊராட்சி கலையரங்கில் நடைபெற்றது. 
விழாவிற்கு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நல்லதம்பி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். எஸ்.வாழவந்தி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அன்புச்செழியன், தமிழ்செல்வி கந்தசாமி, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் மருதவீரன், தொடக்கப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஈஸ்வரன்,  உயர் நிலைர்பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் தனபாக்கியம்குமார், தொடக்கப்பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரமதிசக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மோகனூர் வட்டாரக் கல்வி அலுவலர் அருள்மணி, பரமத்தி காவல்நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர். விழாவில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முடிவில் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
 

More from the section

திருச்செங்கோட்டில் ரூ.1 கோடிக்கு மஞ்சள் விற்பனை
டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனைக்கு திடீர் கட்டுப்பாடு
கோயில் திருவிழா நடத்துவதில் மோதல்: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
பொருள்கள் வாங்கி பாதிப்படையும் நுகர்வோர் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்: நீதிபதி எஸ்.செங்கோட்டையன்
தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்