வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பாவை கல்லூரியில் இந்தோ - தைவான் சர்வதேச கருத்தரங்கு நாளை தொடக்கம்

DIN | Published: 24th February 2019 03:36 AM


ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்தோ - தைவான் மாநாடு மற்றும் கருத்தரங்கு திங்கள்கிழமை (பிப்.25) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகின்றன.
பாவை கல்வி நிறுவனம், தைவான் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்திய - தைவான் சர்வதேச கருத்தரங்கு பிப்.25,  26 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. மாணவர்களுக்கு சர்வதேச அளவில் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரவும், உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் இதுபோன்ற சர்வதேச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. 
இதனையடுத்து கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில், தைவான் செங் குங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரி மாணவர்கள் பங்கேற்று,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு,  சுற்றுப்புற பாதுகாப்பு,  3 டி பிரிண்டிங், மருத்துவம், பொறியியல்,  மின்னணு உபகரணங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள்  போன்ற துறைகளில் புதுமை கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் பரிமாற்ற ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது. மாநாட்டில் சென்னையில் உள்ள தைவான் பொருளாதார, கலாசார மையத்தின் இயக்குநர் சார்லஸ் லீ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். 
மும்பை ஐ.ஐ.டி.யின் மெக்கானிக்கல் துறை சிறப்பு பேராசிரியர்  யு.சந்திரசேகர்,  தைவான் யுவான்ஜி பல்கலைக்கழக சமூக கொள்கை அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சிங் பு சென்,  தைவான் தேசிய செங் குங் பல்கலைக்கழக மெக்கானிக்கல் துறை இணைப்பேராசிரியர் சியா யுவான் சென், எரோநாட்டிக்கல் துறை பேராசிரியர் சிங் சியாங் செங், ஜப்பான் மியாசகி பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ஹரிஸ்குமார் மத்யாஸ்தா, தைவான் ஆசியா பல்கலைக்கழகப் பேராசிரியர் யுங் ஹெய் சென் உள்ளிட்ட 14 பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டு ஏற்பாடுகளை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், இயக்குநர் ( நிர்வாகம்) கே.கே.ராமசாமி,  கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.  
 

More from the section


நரசிம்மர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா


மனுத் தாக்கலுக்கு யாரும் வராததால் வெறிச்சோடிய ஆட்சியர் அலுவலகம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு
மக்களவைத் தேர்தலில் துரோகிகளை முதல் எதிரியாக நினைத்து செயல்பட வேண்டும்:  அமைச்சர் பி.தங்கமணி
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்