வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

இறகுப் பந்து போட்டி: சேலம், ஈரோடு அணிகள் வெற்றி

DIN | Published: 12th September 2018 07:52 AM

ஓமலூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப் பந்தாட்டப் போட்டியில் சேலம், ஈரோடு அணிகள் வெற்றி பெற்றன.
ஓமலூரில் செயல்பட்டு வரும் ஸ்ட்ரிங்ஸ் பெதர்ஸ் பாட்மிட்டன் அகாதெமி சார்பில் பள்ளி மாணவர்கள் விளையாடும் மாநில அளவிலான இறகுப் பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்களில் 10, 13 மற்றும் 15 வயது என மூன்று பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டியில் சேலம், சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நெல்லை, தருமபுரி, நாமக்கல், விழுப்புரம், வேலூர் உள்பட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
10 வயதுக்குள்பட்டோருக்கான இறுதிப் போட்டி இரட்டையரில் ஈரோடு தரணிதரன், சுதர்ஷன், 13 வயது பிரிவில் குஷ், நிதின், 15 வயது பிரிவில் சுதர்சன், லக்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தனிநபர் பிரிவில் 10 வயதுக்கான போட்டியில் ஈரோடு சுதர்சன், பெண்கள் பிரிவில் சேலம் சம்யுக்தா, 13 வயது பிரிவில் திண்டுக்கல் லக்சன், பெண்கள் பிரிவில் ஈரோடு ஹர்ஷினி, 15 வயது பிரிவில் சேலம் சுதர்சன், பெண்களில் சென்னை நவனிஷா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
மேலும், சென்னை, மதுரை, கோவை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனையர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு கோப்பையும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன.
 

More from the section

அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும்
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-இல் துவக்கம்: 40,000 பேர் எழுதுகின்றனர்
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் பெரியத் தேரோட்டம்

மேட்டூர் ஐடிஐ-யின் தற்காலிக பயிற்றுநருக்கான
விண்ணப்பங்கள் வரவேற்பு

கால்நடை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மையம் திறப்பு