சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

சீருடையில் கேமராவை பொருத்தி கண்காணிக்கும் காவல் ஆய்வாளர்

DIN | Published: 12th September 2018 07:52 AM

தம்மம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் தனது சீருடையில் கேமரா பொருத்தி விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.
தம்மம்பட்டி பேருந்து நிலையம், வாரச்சந்தை, கடைவீதி, துறையூர், ஆத்தூர், கெங்கவல்லி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் 15-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, நகரின் நடப்பு முழுவதும் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் இருந்தபடியே கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிர கண்காணிப்பை காவல் ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்ட போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஆய்வாளர் விஜயகுமார், தனது சீருடையில் கேமராவை பொருத்தி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்கள், சிலை கரைப்பு இடங்கள் முதலியவற்றை நேரில் ஆய்வு செய்து அதனை கேமராவில் பதிவு செய்து வருகிறார்.
இதுகுறித்து தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் விஜயகுமார் கூறியது, நடப்பாண்டு 60 விநாயகர் சிலைகள் வைக்கவேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, இந்த கேமராவை வாங்கியுள்ளேன். இதை வாகனத்திலும், சீருடையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால், நம் முன் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், மனு கொடுக்க வருபவர்கள் கூறும் விவரங்கள் அனைத்தும் பதிவாகும்.
நான் கேமரா பொருத்தியிருப்பதைக் கண்ட ஆத்தூர் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களையும் வாங்கி பொருத்திக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.
 

More from the section

சேலத்தில் இன்று ஓவியப் போட்டி
ஈச்ச ஓடைப்புதூரில் கல்விச் சீர் விழா


பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒளிரும் டிஜிட்டல் பலகை திறப்பு
ஓமலூர், தாரமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு