வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சொந்த கிராமத்துக்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN | Published: 12th September 2018 07:49 AM

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த கிராமத்துக்கு வந்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த ஊர் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையம் கிராமமாகும். இங்கு அவரது பூர்வீக வீட்டில் அவரது தாயார் தவசாயியம்மாள் வசித்து வருகிறார். 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் நெடுஞ்சாலை நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஒவ்வொரு முறை சேலம் மாவட்டத்துக்கு வரும் போதும், அவர் தனது சொந்த கிராமத்துக்கு சென்று தனது தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்து அவரிடம் ஆசிபெறுவது வழக்கம்.
இந்நிலையில்,  செவ்வாய்க்கிழமை இரவு சிலுவம்பாளைம் கிராமத்துக்கு வந்த முதல்வர் தனது தாயாரிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், அவரை வணங்கி ஆசிபெற்றார். 
தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் குறைகேட்டு மனுக்கள் வாங்கிய அவர்,  உள்ளூர் மக்களிடம் சற்றுநேரம் உரையாடிய பின்னர் விடைபெற்றுச் சென்றார்.

More from the section

சேலம் வடக்கு, தெற்கு தொகுதிகளில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் துவக்கம்

சேலத்தின் கலை, பண்பாடு மீட்டுருவாக்கப்பட வேண்டும்
முன்னாள் துணைவேந்தர்  இ.சுந்தரமூர்த்தி

பொய் வழக்கில் 9 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முயற்சியைக் கண்டித்துப் போராட்டம்
வழிப்பறி, நகை கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
பருவ நிலை குறித்த நூறாண்டுத் தரவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன: வானிலை ஆய்வு மைய இணை இயக்குநர் தகவல்