21 ஏப்ரல் 2019

இறுதி ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு சிறை வளாகத்தில் விழுந்ததில் தீ விபத்து

DIN | Published: 20th March 2019 09:41 AM

சேலத்தில் இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு தீப்பொறி மத்திய சிறை வளாகத்தின் பின்புறம் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறை வளாகத்தின் பின்பகுதியில் ஆத்துக்காடு சாலையை ஒட்டி சிறைக்குச் சொந்தமான காலி இடம் உள்ளது. இப்பகுதியை சிறைவாசிகள் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. கோடை காரணமாக இப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது.
இதனிடையே, செவ்வாய்க்கிழமை பிற்பகல் அப்பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி, புதர் மீது விழவே புதர் முழுவதும் தீப்பிடித்துக் கொண்டது.
தகவலின் பேரில் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள செடி, கொடிகள் எரிந்து நாசமாயின. 
தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from the section

சேலம் மாவட்டத்தில்89 மி.மீ. மழை பதிவு
பெரியேரி எஸ்.ஆர்.எம். முத்தமிழ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மணிவிழுந்தான் பாவேந்தர் மெட்ரிக். பள்ளி சாதனை
ரயில் மோதியதில் கட்டடத் தொழிலாளி பலி
சேலம் மாவட்டத்தில் 89 மி.மீ. மழை பதிவு