24 பிப்ரவரி 2019

கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

DIN | Published: 12th September 2018 05:28 AM

திண்டுக்கல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவரை வெட்டிக் கொலை செய்த 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த பா.செல்வக்குமார் கடந்த ஜூலை 31ஆம் தேதி பித்தளைப்பட்டி பிரிவு அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 
இந்த கொலை வழக்கு தொடர்பாக சித்தையன்கோட்டை பகுதியைச் சேர்ந்த கலீல் ரகுமான்(35), சி.முகமது காலித்(23), பி.முகமது சலீம்(30), 
கடலூர் மாவட்டம், திருப்பாப்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரா.சமீர் அலி(28) ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீஸார் கைது செய்தனர். 
 தற்போது இந்த 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
இந்நிலையில், இந்த 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல் பரிந்துரை செய்துள்ளார். 
அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அதற்கான உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ளார்.
 

More from the section

வேடசந்தூர் அருகே வியாபாரி வெட்டிக் கொலை
திண்டுக்கல் மாவட்டத்தில் 1.49 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்'
நிலக்கோட்டை அருகே முதியவர் கொலை:துக்கம் விசாரிக்கச் சென்ற உறவினர் விபத்தில் சாவு
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் மூன்றாவது நாளாக காட்டுத் தீ
மகளிர் ஹாக்கிப் போட்டி: நாகையக்கோட்டை அரசுப் பள்ளி முதலிடம்