20 ஜனவரி 2019

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை 4 மடங்கு உயர்வு: மல்லிகை கிலோ ரூ.1300

DIN | Published: 12th September 2018 05:26 AM

விநாயகர் சதுர்த்தி விழா வியாழக்கிழமை  கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை, சம்பங்கி பூக்களின் விலை 4 மடங்கு அதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை சந்தைகளில் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
திண்டுக்கல் சந்தையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ.1300 வரை செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் சம்பங்கி பூக்களின் விலையும் கிலோவுக்கு ரூ.150-இல் இருந்து ரூ.700ஆக உயர்ந்தது. கோயில் வழிபாட்டுக்கு தேவையான அரளி கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.300 வரை விலை உயர்ந்தது. 
மல்லிகை பூக்களின் வரவு குறைவாக இருந்ததால், சந்தைக்குள் விவசாயிகள் நுழைவதற்கு முன்பாக, வியாபாரிகள் போட்டிப் போட்டு கொள்முதல் செய்தனர். இதனால், நந்திவட்டான் பூவுக்கும் வரவேற்பு அதிகரித்தது. சாதாரண நாள்களில் 3 பாக்கெட் நத்திவட்டான் பூக்கள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். 
ஆனால், செவ்வாய்க்கிழமை 1 பாக்கெட் நந்திவட்டான் பூக்கள் ரூ.350-க்கு விற்பனை செய்யப்ட்டது வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மல்லிகைப் பூ விலை புதன்கிழமை ரூ.2ஆயிரமாக உயரலாம் என வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
 

More from the section

குளிருக்கு தீ மூட்டியவர் மூச்சு திணறி சாவு
உசிலம்பட்டியில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வத்தலகுண்டு அருகே குடும்பத் தகராறில் மைத்துனர் கொலை4 பெண்கள் காயம்
பழனியில் ஜன.22 இல் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
பேத்துப்பாறை பகுதியில் பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை