புதன்கிழமை 23 ஜனவரி 2019

பழனியில் சாரல் மழை

DIN | Published: 12th September 2018 05:27 AM

பழனியில் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் லேசான காற்றுடன் சாரல் மழை பெய்தது. 
   பழனியில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திங்கள்கிழமை இரவு லேசான சாரல் மழை பெய்தது.  செவ்வாய்க்கிழமை மாலை லேசான காற்றுடன் சாரல் மழை சுமார் ஒருமணி நேரம் பெய்தது. மேகமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்ததால் மாலை நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. 
பள்ளி மாணவர்கள் குடைகள் இன்றி மழையில் நனைந்தபடியே சென்றனர். பழனி மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.  இதனால் நகரில் குளுமையான சூழல் நிலவியது.

More from the section

59 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் அரசு கள்ளர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை
விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு
அரசுப் பேருந்து மோதியதில் பெண் சாவு
பழனி அருகே தரமற்ற முறையில் அமைக்கப்படும் சாலை பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தம்
எரியோடு பகுதியில் ஜனவரி 24 மின்தடை