வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கொடைக்கானலில் நகராட்சி கடைகளுக்கு "சீல்'

DIN | Published: 19th February 2019 06:44 AM

கொடைக்கானலில் வாடகை கட்டாத நகராட்சி கடைகளுக்கு திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கும் பணி நடைபெற்றது.
கொடைக்கானல் நகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பல கடைகள் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளன. இந் நிலையில் வாடகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியினை நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் பணியாளர்கள்  மேற்கொண்டனர். இந்த பணியின் போது கோக்கர்ஸ்வாக் பகுதி, ஏரிச்சாலை, அப்பர்லேக் வியூ போன்ற பகுதிகளிலுள்ள 14 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மேலும் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள வீடு மற்றும் தங்கும் விடுதிகள், உணவகங்களில் உள்ள குடிநீர் இணைப்புக்கு வரி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

More from the section

கொடைக்கானலில் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதி: கோவை பெண்ணிடம்  ரூ.1.15 லட்சம் பறிமுதல்
பொதுமக்களின் ஓட்டு பணத்துக்கு அல்ல, குடிநீருக்கு ஆழியாறு-வைகை இணைப்புத் திட்டத்தை முன்வைத்து 200 கிராமங்களில் களம் இறங்கிய விவசாயிகள்!
நிலக்கோட்டை அருகே ரூ.6.80 லட்சம் பறிமுதல்
பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்