வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

கோபால்பட்டி, செந்துறை பகுதிகளில் பிப்ரவரி 19 மின்தடை

DIN | Published: 19th February 2019 06:46 AM

செந்துறை மற்றும் கோபால்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்திருப்பதாவது: 
   செந்துறை மற்றும் கோபால்பட்டி அடுத்துள்ள வி.குரும்பப்பட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (பிப். 19) மாதாந்திர  பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, சில்வார்பட்டி, மருநூத்து, கோணப்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிபட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எர்ரமநாயக்கன்பட்டி, எஸ்.கொடை மற்றும் ராமராஜபுரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. 
 அதேபோல்செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டூர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி,  சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி,  ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
 

More from the section

நிலக்கோட்டை அருகே ரூ.6.80 லட்சம் பறிமுதல்


கொடைக்கானலில் மேலும் 10 கட்டடங்களுக்கு சீல்

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
இரும்புக் கடையில் ரூ.60 ஆயிரம் திருட்டு
திண்டுக்கல் இளைஞர் கொலை வழக்கில் 2 பேர் கைது