புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

அண்ணா பிறந்த நாள்: செப்.16 இல்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி

DIN | Published: 12th September 2018 09:49 AM

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் வரும் 16 ஆம் தேதி பள்ளி, மாணவ - மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி வரும் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. 
 இதுகுறித்து மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கி.த.ராஜகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 110ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் வரும் 16 ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டிகள் நடைபெறுகிறது.   மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடத்தப்படவுள்ளது.
 15 கிலோ மீட்டர் தூரப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கடந்த 2005 ஜனவரி முதல் தேதி அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களாக (13 வயதுக்குள்) இருத்தல் வேண்டும். 20 கிலோ மீட்டர் தூரப்போட்டியில் பங்கேற்போர் கடந்த 2003 ஜனவரி முதல் தேதி அல்லது அதற்கு பின்னர்  (15 வயதுக்குள்), கடந்த 2002 ஜனவரி முதல் தேதியிலும் (17 வயதுக்குள்) பிறந்தவர்களாக இருத்தல் அவசியம்.
 மகளிர் பிரிவில் பங்கேற்கும் மாணவியர் 10 கிலோ மீட்டர் போட்டியல் பங்கேற்க கடந்த 2005 ஜனவரி முதல் தேதி அல்லது அதற்குப் பிறகும், 15 கிலோ மீட்டர் போட்டியில் பங்கேற்பவர் கடந்த 2003 ஜனவரி முதல் தேதி அல்லது அதற்கு பின்னரும், 2002 ஜனவரி முதல் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். 
 போட்டிகளில் கலந்துகொள்வோர் தங்களது சொந்த சைக்கிள்களை கொண்டுவரவேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடிகளைக் கொண்ட சைக்கிள்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கியர் சைக்கிள் மற்றும் ரேஸ் சைக்கிள்கள் அனுமதிக்கப்படமாட்டாது.  போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் தங்களது பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வயதுச் சான்றுகளை கண்டிப்பாக பெற்றுவருதல் வேண்டும். போட்டி நாளான வரும் 16 ஆம் தேதி அன்று காலை 7 மணிக்கு எம்.ஜி.ஆர்.விளையாட்டு அரங்கில் பெயரைப் பதிவு செய்தல் வேண்டும் என அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.

More from the section

தம்பதி மீது  கார் மோதல்: கணவர் சாவு


போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

மதிமுகவினர் இனிப்பு வழங்கல்
நான்கு வழிச்சாலையில் விபத்து: ஓய்வு பெற்ற அதிகாரி சாவு
போலியோ சொட்டு மருந்து முகாம்களை முறையாக நடத்தக்கோரி வழக்கு