திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

தனியார் மருத்துவமனையில் ரூ.1.15 லட்சம் திருட்டு

DIN | Published: 12th September 2018 09:51 AM

மதுரையில் தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு பூட்டை உடைத்து ரூ.1.15 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை கோச்சடை பென்னர் காலனியைச் சேர்ந்த மருத்துவர் அமீர் பாஷா(42). இவர் மாட்டுத்தாவணி பிரஸ் கிளப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். தினசரி காலை முதல் இரவு வரை இயங்கும் இந்த மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்துள்ளார். இரவு நேரங்களில் மருத்துவமனை பூட்டப்பட்டு விடும். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அமீர் பாஷா மருத்துவமனையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதில் நள்ளிரவில் மருத்துவமனைக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மருத்துவரின் அறையில் இருந்த ரூ.1.15 லட்சத்தை திருடிச் சென்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக அமீர்பாஷா அளித்தப் புகாரின்பேரில் கோ.புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More from the section

மத்திய-மாநில அரசுகளின் உதவித் தொகை அறிவிப்பு ஏமாற்று வேலை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்
திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
திருநகரில் மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி தொடக்கம்: 28 அணிகள் பங்கேற்பு
"கிராமசபை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்'