சனிக்கிழமை 23 மார்ச் 2019

ஆஸ்டின்பட்டி அருகே மயங்கி விழுந்த மயில்: விஷம் வைப்பா?

DIN | Published: 19th February 2019 08:11 AM

திருப்பரங்குன்றத்தை அடுத்த ஆஸ்டின்பட்டி அருகே திங்கள்கிழமை மயங்கி விழுந்த மயிலை போலீஸார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  
 ஆஸ்டின்பட்டியை அடுத்த கரடிக்கல் பகுதியில் பாண்டி என்பவரது தோட்டத்தில் திங்கள்கிழமை மாலை மயில் ஒன்று மயங்கிக் கிடந்தது. 
இதனைக் கண்ட அப்பகுதியினர் மயிலை மீட்டு ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி, தனிப்பிரிவு தலைமை காவலர் லிங்கம் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினர் வழிகாட்டுதலின்படி விஷ் டு ஹெல்ப் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஷ்வா மற்றும் சகாதேவன் ஆகியோரிடம் மயிலை ஒப்படைத்தனர். மேலும் கரடிக்கல் , ஆஸ்டின்பட்டி பகுதியில் வயல்வெளிகளில் யாரேனும் மயில்களுக்கு விஷம் வைத்துள்ளனரா என்பது குறித்து  போலீஸார் விசாரிக்கின்றனர்.

More from the section

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 26 மீனவர்கள் மதுரை வருகை
 


வேட்பாளர் மீது அவதூறு: தேர்தல் அலுவலரிடம் புகார்

ஆடு வியாபாரியிடம் ரூ.63 ஆயிரம் பறிமுதல்
வல்லடிகாரர் சுவாமி கோயிலில் அதிமுக வேட்பாளர் வழிபாடு
சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர், காவல் ஆணையர் ஆலோசனை