வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் பலி: காமராஜர் பல்கலை.யில் அஞ்சலி

DIN | Published: 19th February 2019 08:13 AM

காஷ்மீர் மாநிலத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்து வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் கே.சின்னையா, டீன் நல்லகாமன், தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அதிகாரி ரவி மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 
பல்கலைக்கழக கல்லூரி: மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பி.ஜார்ஜ் தலைமை வகித்து வீரர்களின் படத்துக்கு மலர்அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
மதுரைக்கல்லூரியில்...: மதுரைக்கல்லூரியில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை வகித்து அஞ்சலி செலுத்தினார். கல்லூரி வாரிய உறுப்பினர் இல.அமுதன் மற்றும் துறைத்தலைவர்கள், மாணவ, மாணவியர் அஞ்சலி செலுத்தினர்.
 

More from the section

மதுரை அருகே 80 கிலோ தங்கம் பறிமுதல்: அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு
பேராசிரியை நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அலங்காநல்லூரில் வாக்குகள் சேகரிப்பு


அதிமுக வேட்பாளர் நிகழ்ச்சியை  புறக்கணித்த அமைச்சர்கள்: கட்சி வட்டாரத்தில் பரபரப்பு

"வாரிசுகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சட்டம் இல்லை'