வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

தம்பதி மீது  கார் மோதல்: கணவர் சாவு

DIN | Published: 19th February 2019 08:14 AM

மதுரை அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்த தம்பதி மீது கார் ஏறியதில் கணவர் உயிரிழந்தார்.
மதுரை அருகே உள்ள திருநகர் ஹார்விபட்டியைச் சேர்ந்தவர் பாபு (42). இவரும் இவரது மனைவி சுந்தரியும், மதுரையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைப் பார்த்து வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு வேலை முடிந்தபின்பு, பாபு தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹார்விபட்டி நோக்கிச் சென்றார். பழங்காநத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பைக்காராவைச் சேர்ந்த அமீர் ஜகான் என்பவர் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், தம்பதி இருவரும் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். 
அப்போது திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த இமானுவேல் ஓட்டிவந்த கார் அவர்கள் மீது ஏறியது. இதில் பலத்த 
காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாபு திங்கள்கிழமை உயிரிழந்தார். போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More from the section

நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சர்க்கரை நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சித்திரைத் திருவிழா தேரோட்டம், எதிர்சேவை நாளில் வாக்குப்பதிவு: மதுரையில் 2 ஐஜி-க்கள் மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஆட்சியர் தகவல்
"7 பேர் விடுதலை முடிவை  மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கக் கூடாது'
தேர்தல் விதிமீறல்: செலவின பார்வையாளர்களிடம்  புகார் அளிக்கலாம்