24 மார்ச் 2019

நான்கு வழிச்சாலையில் விபத்து: ஓய்வு பெற்ற அதிகாரி சாவு

DIN | Published: 19th February 2019 08:14 AM

மேலூர்-மதுரை இடையே திங்கள்கிழமை நான்கு வழிச் சாலையில் சாலைத் தடுப்பைக் கடந்து மறுபக்கம் சென்ற கார் மீது  லாரி மோதியதில் ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உயிரிழந்தார்.
மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் வைரப்பன் (60), இவரது நண்பர்களான, குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற விஜயகுமார் (59), சண்முகம் (60) ஆகியோர் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் திங்கள்கிழமை மாலை வந்துகொண்டிருந்தனர். 
மேலூர்- மதுரை இடையே உள்ள நரசிங்கம்பட்டி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பைக் கடந்து மறுபக்கம் பாய்ந்தது. அப்போது மதுரையிலிருந்து மேலூர் நோக்கிச் சென்ற லாரி மீது மோதியது. இதில், வைரப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜயகுமார், சண்முகம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். 
இருவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக் குறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More from the section

மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: மதுரை வீரர்கள் சாதனை
படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது