திங்கள்கிழமை 25 மார்ச் 2019

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகும் 38,541 மாணவ, மாணவிகள்

DIN | Published: 19th February 2019 08:12 AM

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 309 பள்ளிகளைச் சேர்ந்த 38,541 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
 தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி, மேலூர், மதுரை, திருமங்கலம் ஆகிய  நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 42 பள்ளிகளில் இருந்து  2,504 மாணவர்கள், 2,329 மாணவிகள் என 4,833 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளைச் சேர்ந்த 5,581 மாணவர்கள், 6,455 மாணவிகள் என மொத்தம் 12,036 பேர் தேர்வு எழுதுகின்றனர். 
மதுரை கல்வி மாவட்டத்தில் 80 பள்ளிகளில் இருந்து 5,868 மாணவர்களும், 6,798 மாணவிகள் என மொத்தம் 12,666 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 77 பள்ளிகளில் 4,508 மாணவர்கள், 4,498 மாணவிகள் என மொத்தம் 9,006 பேர் தேர்வு எழுதுகின்றனர். 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 38,541 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 1 பொதுத்தேர்வு: பிளஸ் 1 பொதுத்தேர்வில் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 43 பள்ளிகளில் இருந்து  2,247 மாணவர்கள், 2,201 மாணவிகள் என 4,448 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலூர் கல்வி மாவட்டத்தில் 113 பள்ளிகளைச் சேர்ந்த 5,117 மாணவர்கள், 6,127 மாணவிகள் என மொத்தம் 11,244 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மதுரை கல்வி மாவட்டத்தில் 81 பள்ளிகளில் இருந்து 5,474 மாணவர்களும், 6,604 மாணவிகள் என மொத்தம் 12,078 பேர் தேர்வு எழுதுகின்றனர். 
திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் 79 பள்ளிகளில் 4,251 மாணவர்கள், 6,604 மாணவிகள் என மொத்தம் 8,523 பேர் தேர்வு எழுதுகின்றனர். 4 கல்வி மாவட்டங்களிலும் சேர்ந்து 316 பள்ளிகளில் இருந்து 17,089 மாணவர்கள், 19,204 மாணவியர் என மொத்தம் 36,293 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


 

More from the section

மதுரையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
வல்லடிகாரர் சுவாமி கோயில் தேரோட்டம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: மதுரை வீரர்கள் சாதனை
படிப்பை முடிக்கும் பெண்கள் வீட்டில் முடங்கி விடக்கூடாது
சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு: போஸ்கோ சட்டத்தில் இளைஞர் கைது