திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

உலக மண்வள தினவிழா

DIN | Published: 10th December 2018 05:13 AM

முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை அலுவலக கூட்ட அரங்கில் உலக மண்வள தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமார் குழித்தட்டு மிளகாய் சாகுபடி குறித்து விளக்கினார். 
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா காணொலி காட்சி மூலம் மண்மாதிரி சேகரிப்பு, நிலச்சீர்திருத்த முறைகள், இலை வண்ண அட்டை பயன்படுத்தும் விதம், அசோலாவின் நன்மைகள், உழவன் செயலி பதிவிறக்கம் குறித்து விளக்கம் அளித்தார்.  ஏற்பாட்டினை வேளாண்மை தொழில்நுட்ப திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

More from the section

கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக புகார்


ஜன. 24 இல் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கம்
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
சாயல்குடி அருகே 1,980 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்