திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பள்ளி சார்பில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி

DIN | Published: 10th December 2018 05:13 AM

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
பள்ளித் தாளாளர் கணேசக்கண்ணன் கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். கண்காட்சியில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், சங்க கால கருப்பு, சிவப்பு மண் குவளைகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், இரும்பு பொருள்கள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், கல்வெட்டுப் படிகள், நாணயங்கள், 
பழமையான செங்கற்கள், ஓடுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவிகள் ராய் அன்சிகா, மதுமிதா, முகிஆஸிகா, அஸ்விகா, பத்மாவதி, விருத்திகா ஆகியோர் பாரம்பரியப் பொருள்கள் பற்றி  விளக்கமளித்தனர். 
கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  பார்வையிட்டனர். முன்னதாக பள்ளி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.  மன்றப் பொறுப்பாசிரியர்  சந்தியா நன்றி கூறினார். 
சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

More from the section

கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக புகார்


ஜன. 24 இல் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கம்
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
சாயல்குடி அருகே 1,980 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்