திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்  நகை, பணம் திருட்டு

DIN | Published: 10th December 2018 05:12 AM

ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்துள்ள பெருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்பஷீர்(21). இவர் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு ஞாயிற்றுகிழமை காலை திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.  உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 பவுன் நகை மற்றும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சில்வர் பாத்திரம், 10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்  சென்றது தெரிய வந்தது. இது குறித்து அப்துல் பஷீர் அளித்த புகாரின் பேரில் உச்சிப்பளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் சிராஜூதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
 

More from the section

கால்நடை மருத்துவமனை சுற்றுச்சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக புகார்


ஜன. 24 இல் அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ராமநாதபுரத்தில் 400 பேருக்கு தாலிக்குத் தங்கம்
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் தவிப்பு
சாயல்குடி அருகே 1,980 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்